லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் நடைபெறும் உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மொத்த பரிசுத் தொகையாக 5.76 மில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திஒய ரூபாவில் ₹49.32 கோடி) வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் நடைபெறும் சம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு ₹30.82 கோடியும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹18.49 கோடியும் வழங்கப்படும்.
முந்தைய இரண்டு சீசன்களில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறை புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெளியேறியது. இந்திய அணிக்கு ₹12.33 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். அட்டவணையில் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகக் குறைந்த ₹4.11 கோடி வழங்கப்படும்.