கிறிக்கெற் வரலாற்றில் தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இலண்டல் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியாஅவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெற்களையும் இழந்து 212 ஓட்டங்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 207 ஓட்டங்கள் எடுத்தது.
282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நான்காவது நாளில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணியில் ஐடென் மார்க்ரம் 136 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கப்டன் டெம்பா பவுமா 66 ஓட்டங்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றி 27 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், கப்டன் டெம்பா பவுமா ஒரு நூற்றாண்டு பழமையான டெஸ்ட் கிரிக்கெட் சாதனையையும் முறியடிக்க வழிவகுத்துள்ளது.
1902-1921 க்கு இடையில் அவுஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் 8 வெற்றிகள், 2 டிராக்கள் என டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தோல்வி கூட இல்லாமல் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த்திருந்தார்.
டெம்பா பவுமா இப்போது 2023 முதல் 2025 வரை 9 வெற்றிகள்,1 டிரா என அதிக வெற்றிகளுடன் தோல்வியைப் பெறாத கப்டன் என்ற 104 ஆண்டுகால மைல்கல்லை முறியடித்துள்ளார்..
இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவிற்கு ஐசிசி பெருமையைக் கொண்டு வந்த ஒரு தலைவராக மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கப்டனாக பவுமாவின் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறது.
