ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ்ஸில் ஏற்பட்ட இரசாயன வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் இருந்து வெடிப்பு ஏற்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.ஜெருசலேம் போஸ்ட்டின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை தளத்திற்கு அருகில் நிகழ்ந்தது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த வெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளன.