Saturday, April 4, 2026 9:13 pm
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Bushehr அணுசக்தி நிலையம் அருகே அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வெளியிட்ட தகவலின்படி, புஷெர் அணு மையம் இன்று காலை மொத்தம் நான்கு முறை தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் அமெரிக்கா இஸ்ரேல் ஆகியவன் இணைந்து மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் அரசு ஊடகமான தாஸ்னிம் நியூஸ் ஏஜென்சி தெரிவிக்கையில், அணு நிலையம் அருகே ஏவுகணை தாக்கியதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் புஷெர் அணு மையம் என்பது அந்த நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே அணு மின் நிலையமாகும். இது புஷெர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 2.2 லட்சம் முதல் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர், மேலும் இது ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றாகும்.
Bushehr அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் ஏற்பட்டிருந்தாலும், தற்போது எந்தவிதமான கதிர்வீச்சு அபாயமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணு மையத்தின் முக்கிய செயல்பாடுகள் பாதுகாப்பாக உள்ளன. இது சர்வதேச அளவில் அச்சத்தை அதிகரிக்கும் செய்தியாக இருப்பதை தாண்டி, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயம் ஈரானுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் எழுந்துள்ளது.

