Sunday, February 15, 2026 7:26 pm
ஹமாஸின் போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஞாயிற்றுக்கிழமை காஸா பகுதி முழுவதும் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார். அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், இஸ்ரேலியப் படைகள் “மஞ்சள் கோடு” என்று அழைக்கப்படும் இடத்திற்குப் பின்னால் உள்ள நிலைகளுக்குத் திரும்பின , இருப்பினும் பாலஸ்தீனப் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து குறைந்தது 601 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு கூறுகிறது. அதே காலகட்டத்தில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

