Saturday, February 7, 2026 3:56 pm
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர் சாக்கின் அவுஸ்திரேலிய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்ட பேரணியை அனுமதிக்குமாறு 13 NSW மாநில மற்றும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஜனாதிபதி ஐசக் ஹெர் சாக்கின் வருகையின் போது போராட்டங்களை கட்டுப்படுத்த NSW பொலிஸாருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. “சிட்னி வீதிகளில் மோதல்களை” பொலிஸார் அனுமதிக்க மாட்டார்கள் என்று பிரதமர் கிறிஸ் மின்ஸ் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் NSW 13 மாநில மற்றும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், திட்டமிட்ட கூட்டத்திற்கும், டவுன் ஹாலில் இருந்து மாநில பாராளுமன்றத்திற்கு அணிவகுப்பு நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யும் வகையில் போராட்ட அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு பொலிஸ் ஆணையர் மால் லான்யோனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

