சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று புதன்கிழமை (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 500,000 ரூபா மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன், இதற்கு மேலதிகமாக, குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Trending
- 112 ஏர் இந்தியா விமானிகளின் உடல்நிலை பாதிப்பு
- ஹல்க் ஹோகன் 71 வயதில் இறந்தார்
- தனது அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தும் AI மோசடி குமார் சங்கக்கார எச்சரிக்கை
- உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் இலங்கை பின்தங்கியுள்ளது
- ” மனிதாபிமான பேரழிவை” பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்கின்றனர்: ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்
- இடைநீக்கம் செய்யப்பட்ட தென்னகோனை நீக்கும் விவாதம் அடுத்தமாதம் நடைபெறும்
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு ஒரு பில்லியன் டொலர் செலுத்த உத்தரவு
- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்