வலைத்தளங்கள் , மொபைல் பயன்பாடுகள் இப்போது தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் விளம்பரங்களைக் காட்டுகின்றன. இந்த சேவைகள் பெரும்பாலும் 18 முதல் 27 வயதுடைய பெண்களையும் சில வயதுக்குட்பட்ட சிறுமிகளையும் உள்ளடக்கியது .
பொருளாதார சிரமங்களைத் தணிக்க, அதிகமான பெண்கள் பாலியல் தொழிலுக்குத் திரும்புகின்றனர்.
சைபர் மோசடி, சுரண்டல், சிறார் உட்பட பாதிக்கப்படக்கூடிய நபர்களின் ஈடுபாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஒன்லைன் விபசார தளங்களின் விரைவான வளர்ச்சியை நிவர்த்தி செய்வதில் பொலிஸ் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலா விசாக்களில் வரும் பல சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கொழும்புப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.