வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். சுமார் 58,947 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7,500 கார்கள் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.