இரண்டு மாதங்களுக்குள் ஒரு பெரிய புதிய இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக காஸாநகரத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
சமீபத்திய மூடிய கதவு கலந்துரையாடல்களில், தலைமைத் தளபதி இயால் ஜமீர், “காஸா நகரத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் செயல்முறை இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே ஆகும்” என்று கூறியதாகவும், பாலஸ்தீனியர்கள் நியமிக்கப்பட்ட “மனிதாபிமானப் பகுதிகளுக்கு” இடம்பெயர ஊக்குவிப்பதற்கான “கருவிகளின் தொகுப்பை” இராணுவம் உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
அந்த நிலை முடிந்ததும், “காஸா நகரத்தைச் சுற்றி வளைத்தல், அதில் நுழைந்து அதை ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஜமீர் கூறினார், ரிசர்வ் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான இராணுவத்தின் நோக்கத்தைக் குறிப்பிட்டார்.