Tuesday, February 3, 2026 8:05 pm
கிரெமோனீஸ் கோல்கீப்பர் மீது நெருப்புப் பந்தம் வீசப்பட்டதற்காக இன்டர் மிலான் ரசிகர்களுக்கு மார்ச் 23 வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இன்டர் மிலான் அணி விளையாடிய போது, ஸ்டாண்டில் இருந்து வீசப்பட்ட ஒரு தீப்பொறி, கிரெமோனீஸ் கோல்கீப்பர் எமில் ஆடெரோ அருகே விழுந்ததை அடுத்து , இத்தாலிய உள்துறை அமைச்சுசெவ்வாயன்று இன்டர் மிலான் ரசிகர்களுக்கு மார்ச் 23 வரை பயணத் தடையை விதித்தது.
மிலன் அமைந்துள்ள வடக்குப் பகுதியான லோம்பார்டியில் வசிப்பவர்களுக்கு, சசுவோலோ, லெஸ்,ஃபியோரெண்டினா ஆகிய இடங்களில் நடைபெறும் இன்டர் லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதையும் இந்த உத்தரவு தடை செய்கிறது. மார்ச் 8 ஆம் திகதி ஏசி மிலனில் நடைபெறும் மிலன் டெர்பிக்கு ரசிகர்களின் நடமாட்டம் இல்லாததால், தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

