இந்தோனேஷியாவில் புதிதாகக் கட்டப்பட்ட முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆம்திகதி வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜகார்த்தாவில், ‘ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்’ என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர் தலைமையேற்று நடத்தினார். அந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள், இந்தியத் தூதர் மற்றும் பல்வேறு மத, கலாசார அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தில் முருகப்பெருமான், விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, சிவன் – பார்வதி, மகாவிஷ்ணு – லட்சுமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள், அகஸ்திய முனிவர், இடும்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.40 மீற்றர் உயரம் கொண்ட அழகிய கம்பீரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் அமைப்பட இருக்கிறது. இந்தியா-இந்தோனேசியா கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை