Saturday, January 24, 2026 10:56 am
பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின் பினர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். இதில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். பங்களாதேஷின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் மன்றத்தில் ஆடியோ மூலம் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில் ,
யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் சட்டவிரோத ஆட்சியை நடத்தி வரும் முகம்மது யூனுஸ் நாட்டை பயங்கரவாதம், சட்ட ஒழுங்கின்மை, ஜனநாயக ஒருங்கிணைப்பு கொண்டதாக மாற்றி ஆட்சி நடத்தி வருகிறார். வங்கதேச அரசியல் அமைப்பு இறையாண்மை நெருக்கடியில் உள்ளாகியுள்ளது. வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.

