Saturday, February 14, 2026 4:27 pm
.
இந்தியா-பாகிஸ்தான் ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்திற்குள் இசைக்கருவிகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், கண்ணாடி போத்த்ல்கள், பெரிய பயணப் பைகள், மதுபானங்கள், கத்திகள், கூர்மையான பொருட்கள், ட்ரோன்கள் ,மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும், ஒவ்வொரு பார்வையாளரும் சிசிடிவி கண்காணிப்பு மூலம் உடல் பரிசோதனை , கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
1,500 பொலிஸார் 600 போக்குவரத்து பொலிஸார், உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மைதானத்திலும் அதைச் சுற்றியும் நிறுத்தப்படுவார்கள். சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு கூடுதலாக, சாதாரண உடையில் உள்ள பொலிஸ், உளவுத்துறையினர் கூட்டத்தைக் கண்காணிப்பார்கள்.
சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர், பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்து ஓட்டத்தையும் உறுதி செய்வதற்காக கா பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
கொழும்பு போக்குவரத்து பிரிவு ஒரு சிறப்பு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ் வீதி, செபாஸ்டியன் கெனால் வீதி, கெத்தாராம வீதி உள்ளிட்ட மைதானத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படும்.
மைதானத்திற்கு அருகிலுள்ள பொதுவான வாகன நிறுத்துமிடம் கிடைக்காது, அதற்கு பதிலாக பழைய MOD கார் பார்க்கிங் , போர்ட் சிட்டி கார் பார்க்கிங்கில் இருந்து பார்க்-அண்ட்-ரைடு ஷட்டில் சேவைகள் இயக்கப்படும்.

