Sunday, July 5, 2026 5:48 pm
குடியேற்றம் தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் குறித்து dரம்ப் நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள போப் லியோ XIV, சுதந்திரத்தையும் செழிப்பையும் தேடி ஐரோப்பாவை அடைய முயன்று உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஐரோப்பாவின் இடம்பெயர்வு விவாதத்தின் மையப் பகுதியில் சனிக்கிழமையன்று ஜூலை நான்காம் thikaதியைக் கழித்தார்.
அமெரிக்கா தனது சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவை பேரணிகள், கொண்டாட்டங்கள் , வாணவேடிக்கைகளுடன் கொண்டாடும் வேளையில், அமெரிக்காவில் பிறந்த போப், சிசிலியத் தீவான லம்பெடுசாவிற்குப் பயணம் செய்து, அங்குள்ள புலம்பெயர்ந்தோர் கல்லறையில் பிரார்த்தனை செய்யவும், தீவின் குடியிருப்பாளர்கள் ,புதிதாக வந்தவர்களுக்காக ஒரு சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றவும் செய்தார்.
சனிக்கிழமையன்று பிற்பகுதியில், அவர் ஜூலை நான்காம் தேதி கொண்டாட்ட மனநிலையில், புனித பீடத்திற்கான அமெரிக்கத் தூதர் பிரையன் பர்ச்சின் இல்லத்திற்குச் சென்றார். பொதுவாகத் தூதர்களைச் சந்திக்காத போப்பாண்டவர்களுக்கு இது ஒரு அரிதான நிகழ்வாகும். பர்ச், லியோவுக்கு நினைவாக ஒரு பேஸ்பால் பந்து, ஒரு aப்பிள் பை , ஒரு அமெரிக்க உலகக் கிண்ண சீருடை ஆகியவற்றைப் பரிசளித்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.
லியோ அமெரிக்க அணிக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தியதாக தூதரகம் X தளத்தில் எழுதியுள்ளது. மேலும், “அமைதி, மத சுதந்திரம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான அமெரிக்க முயற்சிகள் மற்றும் உலகெங்கிலும் தார்மீகத் தெளிவு மற்றும் தைரியத்தின் தேவை” குறித்தும் இருவரும் விவாதித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

