Saturday, January 24, 2026 7:34 pm
2025 ஆம் ஆண்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டசபையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன், “ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 5வது நாளாக சட்டசபை இன்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் இன்று சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், “ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டனத்திற்குரியது. எனவே ஆளுநரை திருப்ப வேண்டும்” என்று தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காத நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான அய்யப்பன் மட்டுமே பங்கேற்றார். அவரும், ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் எனப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுக அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு அறையில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணையப்போகிறாரா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

