Tuesday, April 7, 2026 4:29 pm
வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது வேட்புமனுவை தேர்தல் பார்வையாளர் சரிபார்த்ததில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் வேட்புமனுவை ஏற்க உத்தரவிட்டார்.
ஆதவ்வின் பிரமாண பத்திரத்தை சரிபார்த்த தேர்தல் பார்வையாளர், அந்த வேட்புமனுவை ஏற்க சொன்னார். அது போல் ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பாலு, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியின் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவில் எழுத்துப் பிழை இருப்பதாகவும் பல இடங்கள் நிரப்பாமல் விடுபட்டதாகவும் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

