மராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடிகையும் அஸாருதீன் இன் முன்னாள் மனைவியுமான சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான பண்ணை வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளன்ர்.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார் சங்கீதா. இதைப் பயன்படுத்தி விஷமிகள் உள்ளே புகுந்து சூறையாடியுள்ளனர். இதுகுறித்து புனே ரூரல் பொலிஸில் நடிகை சங்கீதா பிஜ்லானி புகார் அளித்துள்ளார்.
வீட்டின் கதவு , ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, கட்டில், குளிர்சாதன பெட்டி மற்றும் CCTV கேமராக்கள் உட்பட பல வீட்டு உபயோகப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சி பெட்டியும் காணாமல் போயுள்ளது. தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை என்று சங்கீதா பிஜ்லானி கூறியுள்ளார்.