Saturday, May 3, 2025 3:28 pm
அவுஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு .
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக வரலாற்றூச் சிறப்பு மிக்க பிரதமராகிறார்.
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் பதவியில் இருக்கும் பிரதமர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.இது அல்பானீஸின் வளர்ந்து வரும் அரசியல் அந்தஸ்தையும் அவரது தலைமையின் மீதான வாக்காளர் நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் கணிப்புகள், தொழிலாளர் கட்சி வலுவாகச் செயல்பட்டதாகக் கூறுகின்றன, இருப்பினும் அதிக அளவு வாக்குப்பதிவு காரணமாக இறுதி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது, லிபரல் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பிரிஸ்பேனில் உள்ள தனது டிக்சன் தொகுதியில் தொழிற்கட்சியின் அலி பிரான்சிடம் தோல்வியடைந்தார்.இந்த அரிய அரசியல் தோல்வி, 2007 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டின் தொகுதி இழப்பை எதிரொலிக்கிறது.
ஆரம்பகால கருத்துக் கணிப்புகள் கூட்டணிக்கு சாதகமாக இருந்தபோதிலும், தொழிற்கட்சி இறுதி வாரங்களில் மீண்டும் உத்வேகம் பெற்றது.

