Tuesday, February 3, 2026 7:59 pm
அவுஸ்திரேலியாவின் மெல்போனில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை மர்ம நபர்கள் இரவோடு இரவாக தூக்கி சென்றது . இந்திய சமூகத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்திற்கு உறுதியான எதிர்ப்பினையும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவ்விலே என்ற நகரில் இந்திய சமூகத்தினருக்கான மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலை உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
426 கிலோ நிறை கொண்ட இந்த சிலை பீடத்தில் உறுதியாக நிறுவப்பட்டு இருந்தது. விக்டோரியா மாகாண பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை

