Saturday, January 31, 2026 8:33 pm
அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார். இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஒ இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். இந்த வெற்றி, கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் ரிபாகினா தோல்வியடைந்தார்.
சபலென்கா நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தாலும், நான்கு இறுதிப் போட்டித் தோல்விகளையும் சந்தித்துள்ளார். மூன்றாவது செட்டில் சபலென்கா 3-0 என முன்னிலையில் இருந்தபோது, ரிபாகினாவின் பயிற்சியாளர் “கவலைப்பட வேண்டாம், பாசிட்டிவ் ஆக இருங்கள், அடித்துக் கொண்டே இருங்கள்” என அறிவுறுத்தினார். இந்த அறிவுரைகளைக் கேட்ட ரிபாகினா, சபலென்காவின் சர்வீஸ்களை உடைத்து, 3-3 என சமநிலையை எட்டினார்.
சபலென்காவின் இந்த ஆண்டு முழுவதும் ஒரு செட் கூட இழக்காத சாதனையை முடிவுக்குக் கொண்டுவந்தார். ரிபாகினா. உலகின் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்,நம்பர் 6 ஜெசிகா பெகுலா போன்ற தலைசிறந்த இரண்டு வீராங்கனைகளை ரிபாகினா முன்னதாகத்தோற்கடித்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ரியாதில் நடைபெற்ற WTA இறுதிப் போட்டியில் ரிபாகினா, சபலென்காவை 6-3, 7-6 (0) என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது இரண்டாவது பெரிய பட்டத்தை வென்றிருந்தார்.


