Monday, February 2, 2026 4:14 pm
அவுஸ்திரேலிய மகளிர் கிறிக்கெற் அணித்தலைவர் அலிசா ஹீலி ஓய்வு பெற்ற பின்னர், ஓல்ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் அவுஸ்திரேலிய அணியின் கப்டனாகப் பொறுப்பேற்பார் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
35 வயதான ஹீலி, இந்த மாத தொடக்கத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இதன் மூலம் இரண்டு ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ண வெற்றிகள்,ஆறு வெற்றிகரமான ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
28 வயதான மோலினக்ஸ், இந்தியாவுக்கு எதிரான மூன்று ரி20 சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் கப்டனாக இருப்பார், ஹீலி மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரே டெஸ்ட் போட்டியிலும் அணியை வழிநடத்துவார்.
கரீபியன் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள்,டெஸ்ட் அணிகளின் தலைவராக மோலினக்ஸ் பொறுப்பேற்பார் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது

