இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் செயலால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதத்தை எட்டியதும்,தனது துடுப்பை ஏகே-47 துப்பாக்கியைப் போல பாவித்து சுடுவது போல சைகை செய்தது, ரசிகர்களிடையே கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.
ஏகே-47 ரக துப்பாக்கியைப் போல பிடித்துக்கொண்டு, சுடுவது போல அவர் அநாகரீகமாகச் சைகை செய்தார். இந்த விசித்திரமான, வன்முறையைத் தூண்டும் வகையிலான கொண்டாட்டம், இந்திய ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்தது. சமூக வலைதளமான ‘X’ பக்கத்தில் ஃபர்ஹான்-இன் செயலுக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஃபர்ஹான்-இன் இந்தச் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு விளையாட்டுப் போட்டியில் இது போன்ற வன்முறைச் சைகைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.