Saturday, February 14, 2026 5:06 pm
‘அரகலயா’ போராட்ட இயக்கம் , அது பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிதியுதவி குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கூறினார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
“சில நபர்கள் ‘அரகலயா’ என்ற போர்வையில் தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களை அடைய ஒரு உயிரைத் தியாகம் செய்தனர். ஒரு குழு இளைஞர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர். பிரதான ஊடகங்களில் தோன்றி மக்களை அறிவுறுத்தி, தெருக்களில் இறங்கி தாக்கத் தூண்டியவர்கள் – விளைவுகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து – இப்போது அதிகாரத்தில் உள்ளனர், அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் தூக்கு மேடையில் உள்ளனர் என்றார்.

