இலங்கையின் 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேர்தல் இதுவாகும்.
சட்ட சிக்கல்கள் காரணமாக கல்முனை , எல்பிட்டி ஆகிய சபைகளைத் த்ர்த்து, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கலப்பு தேர்தல் முறையின் கீழ் 13,759 மையங்களில் 17.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.
49 கட்சிகள், 257 சுயாதீன குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பவ்ரல் அமைப்பு 3,000 தேர்தல் கண்கணிப்பாளர்களை நியமித்துள்ளது.
அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களைக்கின்றனர்
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி பிரதேசசபையில் மாயவனூரிலும்,
கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் திருநகரிலும்,
தமிழர விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி த கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி கிழக்குஇ குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும் வாக்களித்தனர்.