Wednesday, May 20, 2026 3:50 pm
விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என ஐயுஎம் எல்-க்கு தவெக அழைப்பு விடுத்ததாக காதர் மொகைதீன் கூறியுள்ளார். ஆனால் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என காதர் மொகைதீன் கூறியுள்ளார்.
இது பற்றி ஐயுஎம்.எல் காதர் மொகைதீன் கூறுகையில், நேற்றே என்னிடம் தவெகவினர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கூறினாங்க.. அப்போது நாங்க ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது எந்த நிபந்தனையும் இல்லாமல் தான். எந்த டிமாண்டும் பண்ணல. எந்த கண்டிசஷனும் போடல. உங்க நல்லாட்சி தொடர வேண்டும் என்று தான் நாங்க விருப்பப்படுகிறோம். எனவே அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றோம். எங்களுக்கு அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் யோசிக்க கூட இல்லை. ஆனால் நாங்கள் அன்று எடுத்த முடிவிலேயே தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் ஆதரவு கொடுத்தோம். எங்கள் கட்சிக்காரர்கள் உடன் ஆலோசித்து தான், விஜய்யின் நல்லாட்சி தொடர்வதற்காக தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே இனிமேல் நாங்கள் எதுவும் ஆலோசித்து எல்லாம் முடிவு எடுக்கவில்லை. அன்று கூறியது போலவே விஜய்க்கு நிபந்தனையின்றி அவர் நல்லாட்சி தொடர ஆசைப்படுகிறோம். அமைச்சரவையில் கண்டிப்பாக நாங்கள் இடம்பெறவில்லை” என்றார்.
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

