Saturday, January 17, 2026 10:03 am
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் சட்டமன்ற தலைநகரான கேப் டவுனில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது, இதில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ , அவரது மனைவி சிலியா புளோரஸை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
வெள்ளிக்கிழமை நண்பகலில், கேப் டவுனின் நகர மையத்தில் உள்ள ஆடர்லி தெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை துடைத்தெறியுங்கள் ,”அமெரிக்காவை வெனிசுலாவிலிருந்து ஒழிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
“வெனிசுலாவை விடுதலை செய்!” , “மதுரோவை விடுதலை செய்!” போன்ற கோஷங்களை எழுப்பினர், பாலஸ்தீன, வெனிசுலா மக்களுடன் ஒற்றுமையுடன், பெப்ரவரி 6 ஆம்திகதி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கை தினத்தை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

