Friday, April 3, 2026 5:36 pm
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதம் ஆகியும் முடியவில்லை. இந்த போரால் ஈரானும் இஸ்ரேலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் இந்த போர் காரணமாக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகியவவை தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதோடு விலையும் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ராண்டி ஜார்ஜை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டிருக்கிறார்.
ராண்டி ஜார்ஜ் உடனடியாக ஓய்வு பெறவும் பீட் ஹெக்செத் உத்தரவிட்டார். 2023ல் ஜோ பைடன் அரசால் ராண்டி ஜார்ஜ் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.. தற்போது ஜெனரல் கிறிஸ்டோபர் லானோவ் அமெரிக்கா ராணுவத்தின் தற்காலிக தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

