தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ள நிலையில், இந்த சிலைக்கு அவ்வப்போது மாலை அணிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகளை இணைத்து சில மர்ம நபர்கள் போட்டுள்ளனர்.
காலையில் இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நிர்வாகிகளுக்கு தகவல் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அண்ணா சிலை மீது போடப்பட்டிருந்த திமுக, பாஜக கொடிகளை அகற்றினர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Trending
- கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
- 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
- கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மாணவர்களை உள்ளீர்க்கும் விழிப்புணர்வு கருத்தமர்வு
- கட்டுநாயக்காவில் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது
- இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் வெலிக்கடை பொறுப்பதிகாரி பணிநீக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
- ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் அநுராதபுர ரயில் வீதிகள் திறந்து வைப்பு
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி