Wednesday, February 18, 2026 11:05 am
உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று திடீரென முடங்கியது.
டவுன்டெக்டர் (Down detector) தளத்தின் தரவுப்படி சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக தொழிற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளானர்.

