தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் “உக்ரைன் பகுதி”யிலிருந்து நடந்த “பாரிய சைபர் தாக்குதல்” தான் காரணம் என
X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், க்கூறினார்.
திங்கட்கிழமை உலகெங்கும் நாள் முழுவதும் X தளம் மீண்டும் மீண்டும் செயலிழந்தது. தொடர் மீட்டெடுப்பும், செயலிழப்புமாகவே இருந்தது.
“என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி முகவரிகளைக் கொண்ட, எக்ஸ் அமைப்பை செயலிழக்கச் செய்ய நோக்கத்தோடு ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று ஃபாக்ஸ் நியூஸ் உரையாடலின் போது மஸ்க் கூறினார்.
ஒரு பொது டெலிகிராம் சேனலின்படி, பாலஸ்தீன ஆதரவு ஹேக்கர் குழுவான டார்க் ஸ்டோர்ம் டீம், X இல் நடந்த DDoS தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களை குறிவைப்பதில் இந்த குழு பெயர் பெற்றது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்