Thursday, October 30, 2025 4:48 pm
2025ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ் மொழிபாட செயலமர்வு, வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச சபை நூலக ஒழுங்குபடுத்தலில் நூலகமண்டபத்தில் இடம்பெற்றது.

பூநகரி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வில், வளவாளராக வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர் திருமதி சு சண்முகேந்திரன் கலந்து கொண்டார்.
இதன் போது மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு குழு நிலையில் செயற்படமாணவர்கள் வழிப்படுத்தப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் திரு.மு. கோமகன், பூநகரி பிரதேச சபை செயலாளர் திரு இ.தயாபரன், பூநகரி பிரதேச சபை தவிசாளர் சி.ஸ்ரீரஞ்சன், பூநகரி பிரதேச சபை நூலகர் செ.செல்வக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளோடு தமது வாழ்த்துரைகளையும் வழங்கினர்.
பூநகரி பிரதேச சபை நூலகத்துடன் இணைந்து வெண்கரம் அறக்கட்டளையின் கணினிதொழில் பயிற்சி நிலையம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


