Friday, December 12, 2025 3:03 pm
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பெண்களை புகையிரத நிலைய அதிபர்கள் மட்டுமல்ல, புகையிரத சாரதிகள், முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ளீர்ப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

