Thursday, October 23, 2025 2:02 pm
வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இது தொடர்பில் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட வானிலை அறிக்கையில்,
வங்காள விரிகுடாவில் நாளை வெள்ளிக்கிழமை அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாழமுக்கம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.