Thursday, December 4, 2025 12:25 pm
வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்புபணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று புதன்கிழமை இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது.

வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து நேற்று இரவு 9.45 மணியளவிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது.
குறித்த பாலம் சேதமுற்றபோது தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயல் காரணமாக பெருமளவான பாதைகள் சேதமடைந்திருந்த போதும், தீவிர மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாக தற்போது அதிகளவான பாதைகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.


