Tuesday, January 20, 2026 1:01 pm
ஸிம்பாப்வே நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறும் யு19 கிறிக்கெற் உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணி, குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, போட்டியின் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
இலங்கை அணி 3 விக்கெற்களை இழந்து 59 ஓட்டங்கள் எடுத்து தடுமாரிறியபோது விமத் தின்சாரா 102 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார், கவிஜா கமகே 49, சாமிகா ஹீனடிகலா ஆட்டமிழக்காது 51 ஓட்டங்கள் எடுத்தார்.
அயர்லாந்தின் பந்துவீச்சால் இலங்கை 26 ஓட்டங்களை உதிரிகளாகப் பெற்றது. அவற்றில் 20 வைட் ஓட்டங்களாக இருந்தன, 5 விக்கெற்களை இழந்த இலங்கை 276 ஓட்டங்கள் எடுத்தது.
40.1 ஓவர்களில் சகலவிக்கெற்களையுமிழந்த அயர்லாந்து 161 ஓட்டங்கள் எடுத்தது.
அயர்லாந்து அணிக்காக காலம் ஆம்ஸ்ட்ராங், 83 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.இலங்கை அணிக்காக
ஆலிவர் ரிலே , ரூபன் வில்சன் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 46 ஓட்டங்கள் எடுத்தனர்.இலங்கை அணிக்காக துல்னித் சிகேரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

