Tuesday, January 20, 2026 8:39 am
வின்ட்ஹோக்கில் உள்ள ஹை பெர்ஃபாமன்ஸ் ஓவலில் நடந்த ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண குரூப் டி போட்டியில் தென்னாப்பிரிக்கா தான்சானியாவை 329 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது .
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி கப்டன் முகமது புல்புலியா 100 ஓட்டங்களு, ஜேசன் வாலஸ் ரோல்ஸ் ( ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களும் அடித்தனர்.பால் ஜேம்ஸன் 18 பந்துகளில் 46 ஓட்டங்கள் அடித்து வலுவூட்டினார்.
தான்சானியா 33வது ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 68 ஓட்டங்கள் எடுத்தது. மூவர் மட்டுமே இரட்டை இலக்கங்களை அடித்தனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா தனது தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு, இந்த வெற்றி அதற்கு மிகவும் அவசியமானது.

