Thursday, October 23, 2025 11:12 am
யாழ்ப்பாணம் போதை தடுப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர் எனவும் இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.