Monday, May 18, 2026 3:08 pm
டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம , மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி 171 நாட்களுக்குப் பின்னர் இன்று (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக , அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் , மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது.
அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன் , தற்போதைய நாட்களிலும் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மண் மற்றும் கற்பாறைகளை அகற்றும் போதே இந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்று இரவு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற வேளையிலேயே , இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை அவர் எதிர்கொண்டிருந்தார்.

