Saturday, December 20, 2025 9:44 am
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
பருத்தித்துறையில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாரால் அந்த வீடு முற்றுகையிடப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

