Friday, December 26, 2025 11:57 am
அமெரிக்காவின் “பவர்போல்” லொத்தரின் நேற்றைய குலுக்கலில் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குலக்கலின் பரிசுத்தொகை இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 55,728 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில் 4, 25, 31, 52, 59 ஆகிய எண்களும், சிவப்பு நிறத்தில் 19 என்ற எண்ணும் என மொத்தம் 6 எண்களும் சரியாகப் பொருந்தியுள்ளன.
அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவாகும். 2022 ஆம் ஆண்டு வெல்லப்பட்ட 2.04 பில்லியன் டொலர் பரிசே இதுவரை உலக சாதனையுடன் முதலிடத்தில் உள்ளது.
1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பவர்போல் லொத்தர் குலுக்கல் முறை தற்போது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் 45 மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளது

