Tuesday, December 9, 2025 2:43 pm
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற ருஹுணு கதிர்காம ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருஹுணு கதிர்காமம் ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர 2025 மார்ச் மாதத்தில் நிதி மோசடி செய்ததை அடுத்து தற்போது புதிய பஸ்நாயக்க நிலமே நியமிக்கப்பட்டுள்ளார்.
திலின மதுஷங்க தற்போது தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

