Saturday, December 27, 2025 12:31 pm
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நிலவிய எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.
தாய்லாந்து சார்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் (Nathaphon Narkphanit) மற்றும் கம்போடியா சார்பாக டீ செய்ஹா (Tea Seiha) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் விடுத்த கூட்டு அறிக்கையில் இன்று நண்பகல் முதல் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான போர் நிலமை காரணமாக சுமார் 101 பேர் உயிரிழந்ததோடு, ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


