Tuesday, December 30, 2025 9:50 am
தொலைக்காட்சி அலைவரிசைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலைவரிசைகளின் உரிமங்களை திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. அந்த நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறுவதற்கு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார தகவல் பரப்பலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் வழங்கப்படும் ஒளிபரப்பு அனுமதி தற்காலிகமானது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

