Friday, December 26, 2025 12:39 pm
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் ஊடாக தகவல் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

