தெற்காசிய உதைபந்தாட்ட கூட்டமைப்பின் SAFF சம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து SAFF உறுப்பு நாடுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு SAFF சம்பியன்ஷிப்பை மாலத்தீவுடன் இணைந்து இலங்கை நடத்தியது. 17 வருட இடைவெளிக்குப் பிறகு, “தெற்காசியாவின் உலகக் கிண்ணம் ” என்று அழைக்கப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்காக தெற்காசியாவின் சிறந்த கால்பந்து நாடுகளை இலங்கை மீண்டும் வரவேற்கும்.
1995 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டியின் போது பட்டத்தை வென்றதன் மூலம் SAFF சம்பியன்ஷிப்பில் இலங்கை பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வெற்றி இன்றுவரை நாட்டின் ஒரே SAFF வெற்றியாக உள்ளது