Friday, December 5, 2025 10:36 am
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புடினை ஆயுதப் படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார்.
பின்னர் அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியும் ஜனாதிபதி புட்டினும் 23 ஆவது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து முக்கியமாக பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் திறமையான தொழிலாளர்களின் இயக்கம் ஆகியவற்றில் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
குறித்த மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அரச தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய அலைவரிசையைரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

