Tuesday, December 30, 2025 11:56 am
டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும், புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண நாகவிகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில் டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும், அனர்த்தத்தின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண குணமடைந்து சுகவாழ்வு வாழ வேண்டி பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையை மேற்கொண்டனர்.


