Thursday, October 30, 2025 10:50 am
யாழ்ப்பாணம் – பலாலிப் பகுதியில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை, காணிகளுக்கு சொந்தமான தனியார் காணி உரிமையாளர்களுக்கு கையளிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில், உயர்மட்ட கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில், இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
குறித்த காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்காக, இராணுவத்தின் கட்டம் கட்டமான வெளியேற்றத்தை மீளாய்வு செய்தல் போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான பாதுகாப்புத் தளங்களின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவில் சொத்துக்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய எல்லைகளை இறுதி செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

