Friday, January 16, 2026 11:57 am
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு யாழிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது வீதியில் பயணிக்கின்ற மக்களுக்கு அவர் சைகையில் வணக்கம் கூறியவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.


